என் மனைவி
கடவுள் சில நேரம்
என் அருகில் வரும் நேரம்
உணர்கிறேன் நாள் தோறும்
என் என்னவள் அருகில்
கற்பு கரசி யார் என்றாள்
சட்டென கண்ணகி பெயர் சொல்லும்
உலகில் என் கற்பு கரசியின் சிலை
என் என்னவளின் நிழல்
மாதா பிதா குரு தெய்வம்
வாக்கியத்தில் விடுபட்ட வார்த்தை
மனைவி
இறந்து போன மனைவிக்கு
கல்லறை கட்டியதை காதலின் சின்னமாய்
மாற்றிய மனிதர்களுக்கு முன்
என் காதல் சின்னம்
என் மனைவி உலவும் என் வீடு
உலக அழகி என்று
யார் யாரையோ கொண்டாடும் உலகில்
என் அழகி
என் என்னவள்
காதலர் தினம், அன்னையர் தினம்
என எத்தனையோ தினங்கள்
கொண்டாடும் உலகில்
தினம் தினம் கொண்டாடுகிறேன்
மனைவி தினம் மனதோடு
என் மனைவி
இரண்டாம் தாய்
முதல் குழந்தை
இன்னொரு தகப்பன்
சேலை கட்டிய தென்றல்
நடமாடும் தெய்வம்
இன்னும் என்ன சொல்ல
மனைவி என்பது
தாலியின் மூலம் வந்த
கயிற்று உறவல்ல
கடவுள் எழுதிய
தலை எழுத்தின்
காற்புள்ளி