பார்வைகள்
பார்வைகள் என்பது
விழியின் வழியே
வெளியே சிதறும்
ஒளி சிதறல் என்றே தான்
இதுவரையில் நினைத்திருந்தேன்
ஆனால்
பார்வைக்கும்
பேச தெரியும்
பார்வைக்கும்
ஈர்க்க தெரியும்
பார்வைக்கும்
மாயம் செய்ய தெரியும்
பார்வைக்கும்
களவாட தெரியும்
போன்ற உண்மைகளை
கண்டு கொண்டேன்
உன் பார்வைகள் என்னை
பாடாய் படுத்தும்
வேளைகளில் எல்லாம்