மெல்லிசை மன்னரே

இசையை வரைந்த ஒரு
தூரிகை துயில் கொள்ள
விரும்பியதோ ?

காற்றோடு கலந்த சுவாசம்
கானலாகி மறைந்ததோ?


ராகங்கள் செதுக்கிய
உளி இன்று
உடைந்து போக துணிந்ததோ

இசை வரம் கொடுத்த கடவுள்
வரத்தினை மீண்டும்
திரும்பி பெற அழைத்ததோ?

மெல்லிசை மன்னன் எனும்
ராக சக்கரவர்த்தி
மௌன கீதம் பாடுவதோ

காலத்தை விட கொடியது
எதுவும் இல்லை

ஆயிரம் நல உள்ளங்களை
தந்து தந்து
அவசர கதியில்
திரும்பி பெறுவது
பொழுது போக்கு என்றானது

அந்த வரிசையில் இன்று
ஒரு ஜீவனும்
மண்ணை பிரிந்தது

போய் வாருங்கள்
என் ஐயனே

இனி இறந்து போனவர்களையும்
இறைவனையும்
மகிழ்விக்க
விண்ணுலகில் இசை அமையுங்கள்
நாளை நான் இறந்து வந்த பின்பு
கேட்டு கொள்கிறேன்

இசையே இது
ஒரு கவிதையின்
கவிதாஞ்சலி
ஏற்றுகொள். . . . . .

எழுதியவர் : ந.சத்யா (14-Jul-15, 6:17 pm)
பார்வை : 63

மேலே