மெல்லிசை மன்னன்
மெல்லிசை மன்னன்
மறைந்தான்
இசையும் ஏழு சுரங்களும்
இன்று ராக வீதியில்
மௌன ஊர்வலம் போனது
கவிதை வரிகள்
கண்ணீரில் நனைந்தது !
ஏழு சுரங்களில் சிரித்தவனே
நான் எந்த சுரத்தில் அழுவேன் ?
கண்ணதாசன் வாவென்று அழைத்தானோ
வானத்தில் என் கவிதைக்கு இசையமைக்க
ஆளில்லை என்று கூப்பிட்டானோ ?
காலம் ஏந்தி வந்த கடிதத்தை ஏற்று
உடனே புறப்பட்டு விட்டாயோ ?
ஏழு சுரங்களில் சிரித்தவனே
ராகங்களையும் எங்களையும்
கண்ணீரில் தவிக்க விட்டு சென்று விட்டாயே !
---கவின் சாரலன்