களவு செய்

காதல் கடன் கேட்டு
காலை மாலையென
காத்திருப்பதும்
சுகம் என்றேன்

என் விழியின் பசிக்கு
விருந்தோம்பல் நீ என்று

அன்றாடம்
பசி தீர்த்தும்
மீண்டும் உனை தேடும்
என் கண்கள்

அறுசுவை உணவு உன் தேகம் என்றால்
ஆடை உண்ட
எச்சம் மட்டுமே
விழியால்
ருசித்தவன் நான்

காதல் கடிதம்
எழுத கவிதையை
தொடுத்தவன்
கசக்கி எறிந்தேன்
குப்பையில்

உன்னிடம்
கடிதம் வந்த
கனம்
இறந்து போகுமோ
உன் ஓரப்பார்வையும்
என்ற மரண பயத்தில்

பெண்ணே
தயவு செய்து
எனை களவு செய்

களவாடிய பொருள்
உன் சொந்தமாகி விடும்

நான் உன் சொந்தமாகவேனும்
அதற்காகவாவது
எனை களவு செய் என்னை

களவிற்கு தண்டனையாய்
முத்தம் பல
தண்டனை தர
எனக்கு
வாய்ப்பளிக்கவேனும்

களவு செய்
பின் உன்னோடு என்னை
கலவை செய்

எழுதியவர் : ந.சத்யா (10-Oct-14, 12:37 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : kalavu sei
பார்வை : 127

மேலே