பெண்ணின் சுதந்திரம் ----ப்ரியா
கல்லூரிக்கு சென்றேன்
கலகலப்பாய் பேசினேன்
வாயாடி என்றனர்....!
பேசாமல் இருந்தேன்
ஊமை என்றனர்....!
அமைதியாய் இருந்தேன்
தலைக்கனம் பிடித்தவள் என்றனர்...!
தனித்து இருந்தேன்
ஆணவக்காரி என்றனர்....!
வீட்டிற்கு திரும்பினேன்,
விரைவாய் நடந்தேன்
யாரோ காத்திருப்பதால்
விரைவாய் செல்கிறாள் என்றனர்....!
மெதுவாய் நடந்தேன்
யாரின் வரவையோ காத்து
மெதுவாய் நடக்கிறாள் என்றனர்...!
திரும்பி பார்த்தேன்
யாரையோ தேடுகிறாள் என்றனர்...!
செல்போனில் மெதுவாய் பேசினேன்
காதலனிடம் பேசுகிறாள் என்றனர்...!
உறவு முறை அண்ணனோடு
சிரித்து பேசினேன்
கூத்தடிக்கிறாள் என்றனர்....!
கொஞ்சம் அலங்காரமாய்
சென்றேன்
சிங்காரி என்றனர்....!
குனிந்து நடந்தேன்
கூச்சம் என்றனர்....!
நிமிர்ந்து நடந்தேன்
கர்வம் என்றனர்........!
என் இந்த சோதனை
பெண்ணிற்கு மட்டும்..........
இருந்தால் தப்பு நடந்தால் குறை.......
இதுதான் இன்றைய சுதந்திரமோ.......?