நட்பு

மீண்டுமாய் எனது நன்றிகள்
எனத(எ)ருமை நட்புக்களே!
எண்ணங்களில் சறுக்கினாலும்
வண்ணமயிலிறகாய்
மனம் வருடுகிறாள் ஒருத்தி....
மானசீகமாய் மடிசாய்கிறேன் நான்!

மனசாட்சியாய் நின்று கேள்வியால் வென்று
விடைசொல்கிறாள் இன்னொருத்தி...
வடம் கொண்ட தேராகிறேன் நான்!

அளாவளாவ அவளுக்கு நேரமில்லை
இருப்பினும் இருப்பில் எனக்காய்
இடம் தரும் இன்னொருத்தி...
இவள் முன் பணிவாகிறேன் நான்!

என் பயணப்பாதையில்
ஏற்ற இறக்கங்களாய்
எனை சீராக்கும் ...மந்தாகினிகளே
உங்கள் முன்
சுக்கு நூறாகி சிதறுகிறது -என்
சுயகோபதாபங்கள்...

மடைவெள்ளமாய் விழிநிறைந்து
கன்னம் தொடும் கண்ணீரும்
கதை சொல்கிறது

மானசீகமான அன்பிற்கு
அடிபணிதல் தவிர வேறென்ன
அற்புதம் இருந்துவிடப்போகிறது...

உளமானநட்பு நலமே நாடும்...
நல்விதமாய் நல்நெறி போற்றும்.
நான் கண்டேன் இங்கு!

இறைவனுக்கு நன்றியுரைத்து...
இனியும் தொடர
வேண்டியுரைத்து..
அன்புடன் உங்கள் தோழி

எழுதியவர் : விஜி (5-Feb-21, 4:06 am)
சேர்த்தது : krishna viji
Tanglish : natpu
பார்வை : 804

மேலே