காத்திருக்கின்றேன்

மனதில் காதலை
விதைத்து
மறைந்து விட்ட மன்னா
எங்கே சென்றாய் .?
கனவில் மட்டும்
வருகிறாய்
காதல்ரசம் பொழிகிறாய்
கண்களை திறந்து
நான் பார்த்தல்
கண்ணீராக கறைகிறாய்
கனவில் வரும்
கள்வனே
என் கண்ணெதிரில்
எப்போ வந்திடுவாய்
விழிகளால் பேசும்
வேந்தனே
என்
வேதனை எப்போ
தீர்த்திடுவாய் ?
கண்ணா உனக்காய்
காத்திருப்பேன்
கல்லறை செல்லும் முன்
வந்துவிடு ......