பார்வையால் கொல்லாதே
பார்வை யால் கொல்லாதே
பெருமைமிகு மிப்பெண் ணிருக்கண்கள் ஒப்பா
திருப்பர் பிறபெண்டி ருண்மை -- அருஞ்சமர
கொல்கூர் படையவள் ஓல்கா வவள்கண்கள்
வென்றெ வரையும்சாய்க் கும்
இந்த அழகியின் கண்களுக்கு பிற பெண்டிரின் கண்களை ஒப்பிட முடியாது...
அவளது கண களின் பார்வையானது பெரிய போரில் உபயோகிக்கும் கூரிய வாள்போல
எல்லோரையும் வெட்டிச் சாய்த்து விடும்.
xx குறள் 4