இறுதியில் அனாதையாய் நாம்

தவமாய் கிடந்த தாய்
உடன் வருவதில்லை...!
தன்னைத் தந்த தந்தையும்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கனிந்த காதல்
உடன் வருவதில்லை...!
இனிதாய் இணைந்த இல்லாள்
உடன் வருவதில்லை...!

மனதை மகிழ்வித்த மகனும்
உடன் வருவதில்லை...!
மணமாய் மலர்ந்த மகளும்
உடன் வருவதில்லை...!

போற்றிப் பாடிய பேரர்
உடன் வருவதில்லை...!
நன்மை நல்கும் நண்பன்
உடன் வருவதில்லை...!

கனிவாய் கற்ற கல்வி
உடன் வருவதில்லை...!
பணிவாய் பெற்ற பதவி
உடன் வருவதில்லை...!

படுக்கையில் பரவிய பட்டு
உடன் வருவதில்லை...!
பனிக்காய் போர்த்திய பருத்தி
உடன் வருவதில்லை...!

எனதாய் எண்ணிய எதுவும்
உடன் வரப்போவதில்லை...!
எவர்க்கும் அவர் உயிரும்
என்றும் சொந்தமில்லை...!

உண்மை உணர்ந்து உறவாய்
எண்ணி வாழ்த்திடுவோம்...!
உண்மை உயரமாய் உதவிக்கரம்
கொண்டு வந்திடுவோம்...!

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (1-Mar-14, 11:30 am)
பார்வை : 734

மேலே