உன்னை வாழ்த்திப் பாடுகின்றேன்

நகைச்சுவைக்கென்றே
பிறந்த புயலே,
பிறரை நகைக்கவைத்தே
நீ பெற்றாய் எண்ணில்லா
வெற்றிப் பதக்கமே...........!

உன்னைப் பார்த்தாலே
குழந்தை முதல்
கொள்ளுப்பாட்டி வரை
வாய்நிறைய சிரிப்பு வரும்.!

நீ போடும் வேஷம்
பெரும் விசித்திரம்தான்........
விதம் விதமான
உன் `கோமாளி` தோற்றத்தில்
இரும்பு இதயமும் சிரிக்குமே..!

இன்று நீ
முடக்கப்பட்டாயா அன்றி
முடங்கிப் போனாயா
விசுவாசம் கொண்டு
அளவுக்குமீறிப் பேசியதால்.......!

உன் முடக்கத்தால்
ஏற்பட்ட பேரிழப்பு
சினிமாவுக்கு மட்டுமல்ல
எமக்கும் கூடத்தான் ........!

காகத்தின் நிறம்கலந்து
நீ நடக்கும் நடையே
பாருக்கு பறைசாற்றும்
நகைச்சுவைக்கு மட்டும்தான்
வைகைப் புயலே நீ லாயக்கென்று..!!!!

==================================

தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (1-Mar-14, 2:13 am)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 116

மேலே