மனிதமனம் வென்றதுண்டோ

வாழும் வாழ்க்கை நிலையும் இல்லை
அர்த்தமற்ற வஞ்சனைகள் இங்கெதெற்கு??

மொழியின மதகுல பேதமெல்லாம்-உன்
கல்லறையின் ஒளி விளக்கோ??

உயிர் உடல் பிரிந்து போகையிலே
நாடாண்டவனும் ஆறடி மண்ணிலன்றோ??

மரணத்தில் மனமகிழ்ந்து வெற்றி என்றாய்
என்றேனும் மனிதமனம் வென்றதுண்டோ ??

உணர்ந்தே வாழ்வினில் செயல் படுவோம்.....
பிரிவினை இல்லாது ஒருங்கிணைவோம்..

மத பேதங்கள் இன்றி வாழ்வதினால்
நிறைவே மகிழ்ச்சிகள் உணர்ந்திடுவோம்...

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (1-Mar-14, 12:04 pm)
பார்வை : 362

மேலே