நினைவுகள்

நினைவுகள் என் நித்திரையை கொன்று
நிஜத்தை தொலைக்கிறது
கனவுகள் அதன் கல்லறையை தேடி
காற்றில் கலைகிறது
மௌனங்கள் மட்டும் சிறைபட்டு
என் மனதில் நிற்கிறது
மயானங்கள் என் வருகை பார்த்து
மலர் மாலை தருகிறது
மறுக்காமல் நானும் வருகிறேன்
என் காதல் நினைவுகளோடு…..