மௌன புன்னகைகள்

தேவதை அவளிடம் வரம் கேட்கலாம்,
அவளையே கேட்டால் .

இன்று வரை கொஞ்சம் கர்வம் உண்டெனுக்கு,
உனக்காய் எழுதிய கவிதைகள் என்னுடையதே ..

என் வாழ்கை புத்தகத்தில் உன் பெயர் முன்னுரை துவங்கி முடிவுரை வரை வேண்டுமடி

வேண்டாம் இறைவா இன்னொரு ஜென்மத்தில் இப்படி ஒரு வாழ்கை,
உணர்சிகள் அற்ற ஒரு உரியினத்தில் ஏதேனும் ஒன்றாக என்னை படைத்தது விடு ..

அள்ளி பருக ஆசை இருந்தும் தீண்டாமல் உணர்வுகளை தடுத்து நிறுத்துகிறது உண்மை காதல் ..

உனக்கும் எனக்குமான உறவின் இடைவெளி,
ஓர் இரவு உறக்கத்தின் இடையில் வரும் கனவு போன்றதே ..

ஒரு இரவில் அவளுடன் தனித்திருந்து நொடிகள் கடக்கும் நேரம் அறியவேண்டும் ..

என் கனவுகளை இடித்துவிட்டு அதில் கல்லறை கட்டும் முயற்சியில் அவள்

என் கடிதம் கொண்டு சேர்க்கும் அந்த தபால்காரனுக்காவது தெரிந்திருக்கும் என் காதலின் வலியை..

உன்னை கடந்து செல்கின்றேன் என் நினைவென்னும் பாத சுவடுகளை அங்கே களைந்து கொண்டு..

எப்போதும் நான் முணுமுணுக்கும் பாடலாக அவள் பெயர் இருக்கிறது …

அவளுக்கான என் காத்திருப்புகள் மணி நேரங்களில் தொடங்கி, சந்திப்புக்கு பின் நொடி நேரங்களில் முடிவடைகிறது

பெண்ணே என் கனவுகளை திருடுகிறாயா ,
அப்படியே விட்டுவிடு கொஞ்சம் காலம் அதன் அரவணைப்பிலே வாழ்ந்து விட்டு போகிறேன் ..

என் கவிதைகளுக்கு மட்டும் உயிர் வந்தால், அவை உருமாறி உன் முகம் காட்டியிருக்கும்..

இதுதான் வாழ்க்கை என்று அறிந்துபோகுமுன் அது நம் கைகளிலிருந்து நழுவி செல்கிறது .
இது தான் வாழ்க்கை

தலை கால் புரியாமல் ஆடுகிறேன்,
தனிமையில் கொஞ்சம் வாடுகிறேன்,
மரண பேய் ஆட்டுவிக்கும் முன்னர் அதன் மடியில் கொஞ்சம் தூங்குகிறேன் ..

என் வாழ்கைக்கான கதை என்னிடம் மட்டுமே இருக்கிறது .
அதன் ரகசியம் தெரிந்தவன் நான் மட்டுமே

எழுதியவர் : Arun (9-Apr-14, 9:27 pm)
Tanglish : mouna punnagaigal
பார்வை : 149

மேலே