எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான்...

ஒருவன் என்னை கடந்து செல்கிறான். அவனைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அழைத்தேன். 

என்னப்பா உன்னை பார்த்தால் இந்த பகுதியில் புதியவராக தெரிகிறது. உனது விவரங்களை பற்றி கூற முடியுமா என்றேன். அவனும் புன்சிரிப்புடன அருகில் வந்து ,ஐயா என்னைப் பற்றி என்ன விவரங்கள் தேவை என்று எதிர் கேள்வி கேட்டான். உனது தனிப்பட்ட விவரங்கள் தான் தேவை என்றேன். ஐயா, உங்கள் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் நான் கூறுகிறேன் , கேளுங்கள் என்றான். 

எனது பெற்றோர் பற்றி விவரங்கள் தெரியாது. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். எனக்கு பெயர் நானே வைத்துக் கொண்டேன் எனது நண்பர் கூறியபடி. அங்குள்ள அனைவரும் அதற்கும் ஒப்புதல் தந்தனர். நான் சாதி மதம் அறியேன். தமிழ் மட்டும் பேசுவது எழுதுவது இளமைக் காலம் முதல் . எனக்கு தாய் மொழி நிச்சயம் அது என்று புரிகிறது. எனக்கு சொந்த பந்தம் என்று யாரும் இல்லை. 

எனக்கு கல்வி சம்பந்தமாக அனைத்து உதவிகளை 

திரு கிருஷ்ணன் என்பவரும், 

உடை மற்றும் விடுதியின் மாதாந்திர செலவுகள் 

திரு கிறிஸ்டோபர் என்பவர் கவனித்துக் கொள்கிறார் . 

மேலும் இதர செலவுக்கு 
திரு இப்ராகிம் என்பவர் அவ்வப்போது பல உதவிகளை செய்து தருகிறார்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அதில் விருப்பம் இல்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் எனக்கு நல்ல வேலையை இந்த விடுதியின் காப்பாளர் ,
திரு கரண் சிங் அவர்கள் வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . 

உடனே முதல் நபர் மிக்க மகிழ்ச்சி என்றும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார். இறுதியாக அவனை அணைத்து கொண்டு, இன்னும் உனது பெயரைக் கூறவே இல்லையே என்று கேட்டவுடன், அவன் உடனடியாக எழுந்து நின்று 
எனது பெயர், 

பாரத் குமார் ( @ ) இந்தியன் என்று பெருமையுடன் கூறினான். நான் தமிழன் என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன் என்றான் .

இது நம் தாய் திருநாடு. உள்ளம் சிலிர்க்க அவனை கட்டி அணைத்தேன். 

இதில் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே ரேசன், ஓரே கட்சி, ஒரே ஆட்சி என்று கூறத் எவருக்கும் தோன்றாது. மக்கள் ஏற்கவும் மாட்டார்கள் என்பது என் கருத்து.

அனைவரும் அனைத்தையும் மறந்து "இந்தியன்" என்ற எண்ணத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி இறுதி வரை ஒன்றிணைந்து, ஒன்றிய அரசை வலுவான வல்லரசாக மாற்றி என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 


 ( இதன் கருவும் நோக்கமும். உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். )


பழனி குமார் 
   17.09.2021  

நாள் : 18-Sep-21, 8:16 am

மேலே