எண்ணத்தில் வண்ணங்கள்
எந்த நிறம் பிடிக்கும்..?
சட்டை வாங்க வீதி போறேன்
எந்த நிறம் விருப்பம் கேட்டாள்..?
மஞ்சள் என்றேன்..
திருப்பி கேட்டாள்
நீ கலைஞர் ஆளா...?
பச்சை என்றேன்..
ஓ.. விவசாயி..?
ஆரஞ்சு என்றேன்..
மோடியா..?
கருப்பு என்றேன்..
பெரியார்.....?
நீலம் என்றேன்..
அம்பேத்கர் ..?
சிவப்பு என்றேன்..
காரல் மார்க்ஸ்..?
ஆளை விடு
ஆடையே வேண்டாம்..!
அப்படி சொல்லாதே
ஆசையாய் வாங்கி தாரேன்
வெள்ளைதான் பொருத்தம் என்றாள்..!
அமைதியாய் நான் சொன்னேன்
நீயே முடிவு செய்தாய்..
அடியேன் ஒரு காந்தியன்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
