சாத்தியமில்லை

அநேகமாக
சாத்தியமில்லை
எனினும்,
காதலை விட
நட்பே முக்கியம்
என்றே
முடிந்து போகும்
விவாதங்கள்.

கருத்து ஒத்தவன்,
எந்நிலையிலும்
உதவிடும்,
இடுக்கன் களையும்
நட்பு.

உண்மைதான்,
எந்த நிலையிலும்
எதையும்
மறைக்க தேவையில்லாதது,
நட்பு.

ஆனால்,

யார் சொன்னது,
காதலில்
இதெல்லாம்
இல்லையென..

யாரோ ஒருத்தர்
இருக்கிறார்கள்
நமக்காக....
என்ற
நிம்மதிதானே
காதல்...

அக புற தனிமையை
கொல்லும்
அமைதியான கொலைதானே
காதல்...

இரண்டிலும்
வயது தேவையில்லை
என்றாலும்,
காதலே
சிறந்தது...

எல்லோரும்
நினைப்பது போல்,
காமமே காதலெனில்,
நட்பு தான்
சிறந்தது....

ஏனெனில்,

ஆழ்ந்த உறவே
நட்பு...
ஆழ்ந்த நட்பே
காதல்...







✍️கவிதைக்காரன்.




(புரியவில்லை எனில், நிர்வாகம் பொறுப்பல்ல...)

எழுதியவர் : கவிதைக்காரன் (5-Oct-21, 1:09 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : saathiyamillai
பார்வை : 81

மேலே