குமரிப்பையன்- கருத்துகள்

நான் சிறுவனாக இருந்த போது அந்த துயரம் நடந்தது.. ஒன்றும் புரியாத பருவம்.. ஆனால் அதன் தாக்கம் பின்னாளில் எங்கள் குடும்பத்தையே புரட்டிபோட்டது.!

உங்கள் கருத்தின் ஆழத்தை அனுபவித்து உணர்ந்தவர்களில் நானும் ஒருவன்.!

உணர்வை பகிர்ந்தமைக்கு நன்றிகள் இளங்கவியே.!

மிக்க நன்றிகள் அறிஞரே.!

நட்புடன் குமரி

அவர் பல்லாயிர பாடல்களை இசையமைத்து தந்திருக்கிறார். அவைகளில்
"மயக்கமா.. தயக்கமா.?
மமனதிலே கலக்கமா..?"

இந்த ஒரு பாடலுக்கு ஈடுஇணை கிடையாது..! காரணம் திரைதுறையில் வாய்ப்பு தேடி சென்னைவந்த கவிஞர் வாய்புக்காக அலைந்தும் கிடைக்காமல் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து டீ குடிக்க வந்தார். அப்போது ரேடியோவில் இந்த பாடல் சிரீனிவாசின் குரலில் ஒலிக்கிறது.! பாடலை கேட்டவர் தன் முடிவை மாற்றி மீண்டும் முயற்சி செய்து பெரும் கவிஞராய் வலம் வந்தார்.. அவர்தான் ரங்கராஜன் என்ற"கவிஞர் வாலி".!

அந்த ஒருபாடலினால் வாலியின் மூலம் பல்லாயிர பாடல்கள் பிறந்தன..!

இப்போது சொல்லுங்கள்..?

நன்றிகள் தோழமையே..!
கதைகள் மூலம் நாம் மனிதத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.. பெற்றோர்கள் இன்று வீதியில்
அவர்களை கேட்டால் விதியில் என்கிறார்கள்.!

விதியை மதியால் மாற்றமுடியாதா.?
தொடர்ந்து பதிவை படித்து கருத்தை பதிக்கும் உங்கள் ஊக்குவிப்புக்கு மீண்டும் நன்றிகள்.!

காதலனும் காதலியுமாக இருந்தால் "நாளைய பொழுதை" உறுதியாக கூற முடியாதல்லவா.!
நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..!

இது திருமணம் முடிந்து காதல் கொண்ட தலைவனும் தலைவிக்குமே கச்சிதமாக பொருந்தும்.!

நேற்று - நினைவு
இன்று - நிஜம்
நாளை - கனவு
முக்காலமும் இணையாக
எக்காலமும் துணையாக தொடர்வதாக சொல்லபட்ட கவிதை வரிகள்..
கவிஞர்வாலி அவர்களின் வைரவரிகள்..
பல பாடல்களில் ஒன்று
பலா பழத்தை போன்று.!

முகநூலில் தவம் செய்தால் போதும்.!

பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா

இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்

அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்

இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்

வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே

அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே

எங்கள் பாரதம் தான் எங்கள் அரவணைப்பும் பாதுகாப்பும்

எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை

இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா..!

----------------------------------------------------------------------------
கவிஞர் அல்லாமா இக்பால் எழுதிய "ஸாரே ஜஹான் சே அச்சா " பாடலின் தமிழ் ஆக்கம் இது..!

இதயத்தை தொட்டதை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்..!

விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா(63). கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு சென்றார். அங்கு இருந்து அன்றைய பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் விண்வெளியில் இருந்து பேசினார். அப்போது ராஜீவ் அவரிடம் நமது இந்தியா அங்கு இருந்து பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்று கேட்டார்..!
அப்போது அவர் சொன்ன கவிதை "ஸாரே ஜஹான் சே அச்சா "..!
அன்று நானும் நிலவிலிருந்து கற்பனை செய்தேன்... எந்த அளவு அர்த்தமுள்ள கவிதை வரிகள்..!

என் இதயத்தில் இதை வெல்ல இனியொரு கவிதை....
" No chance ..!"

குமரி பையன்

கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றிகள் தோழமையே.!

வழக்கம்போல் வந்துவாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் நட்பே.!

வருகைக்கும் வாழ்துக்கும் நன்றிகள் அறிஞரே.!

தாராளமாக பேரனின் பற்றில் எழுதிக்கொள்ளட்டும்..!
எல்லாமே தாத்தாவின் பணம்தானே.!

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றிகள் அறிஞரே.!


பிப்ரவரி 14 வாலன்டன்ஸ் டே! காதலர் தினம்!

பாரம் பரியமாய் இல்லாது திடீரென்று முளைத்து சமீபகாலமாக மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த காதலர் தினம் வழக்கம்போல் பண்பாடு மற்றும் நல்லொழுக்க சிந்தனைக்கும் மெருகூட்டாத வீணாக விரயமாக்கப்படும் ஓர் தினமே!

பக்குவமற்ற சிந்தனைகளாலும் பண்படாத நோக்கங்களாலும் வேயப்பட்ட இளைஞர்கள் சிலர் புற அழகின் மயக்கத்தில் முறைகேடாக உடல்வேட்கையைத் தணித்து கொண்டு காதல் என்ற பெயரை சூட்டிக் கொள்கின்றனர்.

வெளிப்பார்வைக்கு காதலை தூய்மையானதாக தெயிவீகமானதாக இவர்கள் சித்தரித்தாலும் நடை முறையில் கீழ்த்தரமான உணர்வுகளின் வடிகாலாகவே காதலைப் பயன்படுத்துகின்றனர்.

கதைகளும் நாவல்களும் காதலையே மையப்படுத்துகின்றன. இலக்கியத்தின் பல பகுதிகளை காதலின் தாக்கத்துக்கே ஆளாகியிருப்பதைப் பார்க்கிறோம். சினிமாக்களும் டி.வி.களும் காதலையே பிரதானப்படுத்து கின்றன. சில மனிதர்களின் தனிப்பட்ட கேடுகெட்ட ரசனைகள் எல்லாம் காதலென்ற பெயரால் ரியலிசம் என்ற பெயரால் காமிராக்கள் வழியாகக் காட்டப்பட்டு நாட்டிலுள்ள ஆணையும் பெண்ணையும் மட்டமான கற்பனைகளில் மிதக்க விடுகின்றது.

காதலுக்காக முழுமூச்சாய் நிற்பதும், அடிவாங்குவதும், உதைபடுவதும் அதற்காக சாவதுமாய் காட்டப்பட்டு அவைகள் தியாகங்களாகவும் சித்தரிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறது.காதலுக்காக தற்கொலைகள் செய்துகொள்வதும் உன்னதமானதாக திணிக்கப்படுகிறது. இதற்கு இவர்களின் குறி இளைஞர்கள்! இளைஞகள்! இளமை! நல்ல நோக்கங்களுக்காக பட்டை தீட்டப்பட வேண்டிய இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும் வீண்விரயங்களிலும் மூழ்கச் செய்யப்படுகிறது.

கிடைத்தற்கரிய பிறவியை - இளமைப்பருவத்தை எதிர்கால சிறந்த வாழ்க்கைப்பலனுக்காக சித்தப்படுத்தாமல் வீண் விளையாட்டுக்கான ஒரு பருவம் போன்று வீணாக்கப்படுகிறது.

இது மாத்திரமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் வயது வரம்புகள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த காதலெனும் காமம் படுத்தும்பாட்டை நாள்தோறும் செய்திகளில் சந்தி சிரிப்பதை நாம் காணலாம்.

இந்த காதலர் தினத்துக்கான வரலாற்று பின்னனி: கி.பி. 269ல் ரோமை ஆண்டு வந்த இரண்டாம் கிளாடியஸ் எனும் மன்னன், இரானுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும்போது, தங்களின் குடும்பவாழ்வை விட்டுவிட்டு இளைஞர்கள் இரானுவத்தில் சேர தயக்கம் காண்பித்தனர். வாலன்டைன் எனும் பாதிரியார்; மன்னனுக்கு எதிராக இளைஞர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டு மரணதண்டனைக்கு ஆளானார். அவர் கொல்லப்பட்ட தினம் தான் பிப்ரவரி 14ம் தேதி! அந்த போhப் வாலன்டைன் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் தன் காதலிக்கு அனுப்பிய கடிதம் தான் வாழ்த்துச் செய்தியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளது.

கி.பி. 1415ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் (Duke of Orleans) சிறைச்சாலையிலிருந்து தன் மனைவிக்கு முதன் முதலாக வாலன்டைன் கார்ட் அனுப்பினார். அது பிற்காலத்தில் அமெரிக்காவிலும் பரவியது. இன்று உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் நாளாக வியாபித்து நிற்கிறது.

அதே தினத்தில் ரோம் நகரில் ஒரு திருவிழா நடைபெறுகிறது. அது ஜூனோ எனும் பெண்கடவுளின் பெயரால் நடத்தப்படும திருவிழாவாகும். இந்த திருவிழாவின் போது இளம் பெண்களின் பெயர்களை ஒரு ஜாடியில் எழுதி போடுவார்கள். அதிலிருந்து இளைஞர்கள் எடுக்கும் பெயர்களுக்குரிய பெண்கள் அவர்களின் காதலியாவார்கள். அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 15ம் தேதி அன்று லூப்பர்கேலியா என்ற கடவுளுக்கு விருந்து படைக்கப்படும்.

காதல் அம்பு: இன்றைய இளைஞர்களிடத்தில் பிரபல்யமான ஒரு குறியீடு தான் இந்த காதல் அம்பு, அதாவது இதய குறியீட்டில் அம்பு தைப்பது போல் இருக்கும். ரோம் நகரில் வீனஸ் எனும் பெண் கடவுளுக்கு பிறந்த குபிட்(ஊரினை) எனும் இரண்டு இறக்கைகளைக் கொண்ட, கையில் எப்போதும் அம்பை வைத்துள்ள ஆண்குழந்தை தான் அது. குபிட் என்ற கிரேக்க வார்த்தைக்கு காமம், மன்மதன் என்று பொருள்படும். அந்த குழந்தை கடவுள் தன் கையில் வைத்திருக்கும் அம்பை எதாவது ஒரு இளம் பெண்ணின் மீது எய்து விட்டால் அந்த பெண் ஒரு ஆணிண் மீது காதல் கொண்டு விடுவாள் என்பது ரோமின் ஐதீகம். அதனடிப்படையில் உருவானது தான்

ரசித்ததை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழமையே.!

ரசித்ததை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழமையே.!


குமரிப்பையன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே