பச்சைக் கடுக்காய் பரிதிக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பச்சை அரிதகிக்காய் பண்ணும் வகைகேளாய்
இச்சையு றத்துவைத்துப் பிட்டழுத்தி - வைச்செடுத்துத்
திச்ச அரோசியறுந் தீபனமாம் முன்மலம்போம்
அன்னநடை மாதே அறி
- பதார்த்த குண சிந்தாமணி
இதனைக் கொட்டை நீக்கி இடித்து ஐந்தில் ஒரு பங்கு உப்பிட்டு 105 நாள் சென்றபின் பிசைந்து அதனை உணவுடனோ, தனித்தோ உண்டால் உணவில் விருப்பமுண்டாகும்; நல்லபசி எடுக்கும்; மலங்கழியும்