முத்தங்கள்

எங்கிருந்தோ நான் வந்தேன்
எங்கிருந்தோ நீ வந்தாய்
இருவரும் சந்தித்தோம்
சற்று சிந்தித்தோம்
பிறகு அறிமுகமானோம் ..!!

என்னை நீ ஏற்றுக்கொண்டாய்
உன்னை நான் ஏற்றுக்கொண்டேன்
நம் நெஞ்சங்கள் இணைந்து விட்டது
நமக்குள் பரிவு பிறந்து விட்டது
பிரிவு என்ற சொல் மறந்து விட்டது ..!!

காதல் பரிசு என்று கன்னங்கள் சிவக்க
முத்தங்கள் தந்தாய்..கணக்கின்றி ...

இந்த தருணத்தில் கணக்கில்
பிழைகள் வந்தாலும் தவறில்லை
என்று நானும் கணக்கு வைக்கவில்லை
முத்தங்கள் கசக்குதென்று சொல்லவும்
எனக்கும் மனமில்லை ..!!

உன்னை பிரியாமல் இருக்கவும்
முத்தங்கள் சிதறாமல் இருக்கவும்
காற்று புகாமல் கட்டியணைத்தேன்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Oct-21, 1:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : muthangal
பார்வை : 300

மேலே