பணக்கார அத்தை

பணக்கார அத்தை.

வாசலில் ஒரு
BENZ !
மாமா முதலிறங்க,
அத்தை அடுத்திறங்க,
" வாங்க மாமா
வாங்க அத்தை "
நான் அழைக்க!

பின்னால் தெரிந்த
முகம் ஒன்று,
மின்னலென!⚡
உள்ளத்தை
பிளந்து செல்ல,
கள்ளி அவள்
பார்த்த பார்வை!
காலங்கள் கடந்தாலும்
மறப்பேனோ நான்.

அவள் இதயம் 💛
இங்கு விட்டு,
என் இதயம் ❤️
எடுத்துச் சென்றாள்,
இருவருமே WhatsAppல்
நெருங்கி இருந்தோம்.

அதை அறிந்த
அத்தையோ !
அநாகரிமாகவே
WhatsApp ஐ
பிடுங்கி விட்டாள்,
" சேரமுடியுமோ
மறுபடியும்? "

இங்கு நானும்,
அங்கு (USA) அவளும்,
காத்திருப்போம் காலம் வரும் வரை.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (3-Oct-21, 10:55 am)
Tanglish : panakkara atthai
பார்வை : 88

மேலே