நகம் நீளமா வளர்க்கிற பொண்ணு வேண்டாங்க

என்னம்மா, இன்னிக்கு பையனுக்கு பாத்துட்டு வந்த பொண்ணைப் பத்தி என்ன சொல்லறே? நல்ல வசதியான குடும்பம். அழகான பொண்ணு. வேலையில இருக்கிறா. மாதச் சம்பளம் (இ(ரண்டு (இ)லட்சம். பையன் என்ன சொல்லறான்? நீயும் இன்னும் அதைப் பத்தி ஒண்ணும் சொல்லல.
@@@@@@
நாஞ் சொல்லறேனு கோவிச்சுக்காதீங்க. எல்லாம் இருந்து என்ன பிரயோசனமுங்க..பொண்ணு கையில நீளமா நகம் வளக்கிறா. சுத்தபத்தமா இருக்கமாட்டா. பக்கத்தில வர்றவங்க மேலே தெரிந்சோ தெரியாமலோ அவ கையி பட்டா கீரி விட்டுடுமுங்க. அவ வேண்டாம். பையனுக்கு வேற பொண்ணு பாப்போம்.
@@@@@@
என்ன இளமதி சொல்லற? பொண்ணுங்க நீளமா நகம் வளக்கறது தற்கால நாகரிகம்.அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே.
@@@@@@
ஒரு பொண்ணைப் பத்தி இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும். நான் உங்க மனைவி. நாஞ் சொல்லறேன் நீங்க தலைகீழா நின்னாலும் அந்த நீள நகப்பொண்ணு வேண்டாவே வேண்டாமுங்க.
@@@@@@
சரி. இளமதி. இன்னும் இவ்வளவு சொன்னதுக்கப்பறம் நான் என்ன சொல்லறது?

எழுதியவர் : மலர் (29-Sep-21, 9:02 pm)
பார்வை : 122

மேலே