🤔கனவு😴

கோடை விடுமுறை நாட்களில் எப்பொழுதும் என்னுடைய குடும்பம் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று வருவோம். அதை போலவே இந்த வருடம் செல்லலாம் என முடிவு எடுத்தோம்.
பின்பு அனைவருமே மகிழ்ச்சியாக புறப்பட ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு தேவையான உடைகள் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியது.

இன்று இரவு புறப்பட்டு நாளை மறுநாள் காலையில் தான் பேருந்தில் சென்று கிராமத்திற்குள் இறங்கி நின்றோம். பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒரு அழகான கோவில் இருந்தது ,அதனை தொடர்ந்து அடுத்த தெருவில் மைதானத்தில் குழந்தைகள் வித விதமான விளையாட்டுகள் விளையாடி கொண்டிருந்தார்கள் பார்ப்பதற்கு அழகாகவும், வியப்பாகவும் இருந்தது.

பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்து எல்லோரும் பேசிக்கொண்டே இயற்கையின் அழகான தோற்றத்தையும், அமைதியான கடலோரக் கிராமத்தையும் பார்த்துக் கொண்டே வீட்டிற்கு சென்றோம்.உறவினர்களுடன் சில உரையாடல் மற்றும் உணவு பரிமாற்றம் என மகிழ்ச்சியாக  அன்றைய நாள் கழிந்தது.

ஒரு வாரம் கழித்து நானும் என்னுடைய நண்பர்களும் இணைந்து குளிப்பதற்காக கடலுக்கு செல்ல புறப்பட்டு, அனைவரும் பேசிக்கொண்டே நடைபயணத்தை தொடர்ந்தோம். போகின்ற  வழியில் அருகில் வடிவ மற்ற மலையின் மேல் பகுதியில் ஒரு வீடு இருந்தது, அது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், மிக பொலிவாகவும், அழகான தோற்றத்திலும் இருந்தது.

அந்த அழகைக்கான மலை மீது ஏரி பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து சென்றோம். அங்கே ஒரு தாயும் அவளின் குழந்தை மட்டுமே அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.என் நண்பர்கள் அந்த தாயிடம் பேச ஆரம்பித்தார்கள், அந்த தாயின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தது.

எங்களுள் ஒருவர் இங்குள்ளவை அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமாகவும், பொலிவாகவும், அழகாகவும் இருக்கிறது ஆனால், உங்களது முகமோ பூக்களின் இதழ்கள் சுருங்கினால்  பூக்களே அழகற்றதாக மாறிவிடும். அதை போலவே உங்களுடைய முகம் வாடியுள்ளதால்  சுற்றியுள்ள அனைத்தும் செயலற்று இருக்கிறது இதற்கு காரணம் என்ன என்று கேட்ட பிறகு அந்த தாய் கண்ணீர் மட்டுமே முகத்தில் காட்டி பதிலாக கூறினாள்.  பிறகு அந்த தாய்   அவளுடைய கவலைகளை கொட்ட ஆரம்பித்தால்....

இந்த வீட்டில் என்னுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது சில நாட்கள் முன்பு, இன்றோ அந்நிலை கேள்விக்குறியாக உள்ளது. என்னுடைய கணவர் ஒரு மீனவர்,ஒரு மாதத்திற்கு முன்பு மீன்பிடிக்க சென்றவர் இந்த நாள் வரை வீடு திரும்பவில்லை, நானும் ஒவ்வொரு மனித்துளிகளாய் காத்துக் கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு உள்ளவரை!!!!  என அந்த தாய் கூறினாள்.

திடீரென அம்மாவின் குரல் கேட்டு  வியப்புடன் எழுந்து பார்த்தால்  அப்பொழுது தான் தெரிந்தது கனவு என்று.....

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (29-Sep-21, 11:59 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 253

மேலே