மாற்றம் என்பது மாறாதது

கவலையின் கரையோரம் ஒருவர்
உற்சாகத்தின் உச்சத்தில் ஒருவர்
வேடிக்கை பார்ப்பவர் இடையிலே !

நிச்சயம் இல்லை எவருக்கும்
நிரந்தரம் இல்லை வாழ்வும்
உணர்ந்த உள்ளங்கள் அறியும் !

நிலைகள் மாறும் மண்ணில்
மாற்றம் என்பது மாறாதது
ஏற்றம் இறக்கம் இயற்கையே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Sep-21, 8:54 pm)
பார்வை : 617

மேலே