மிதமான வேகம்
மனிதர்களே
மிதமான வேகத்தில்
வாகனத்தை சாலையில்
செலுத்த வேண்டும் என்பது
வாகனம் ஓட்டுபவர்களுக்கு
மட்டும் எச்சரிக்கை என்று
எண்ண வேண்டாம் ...!!
வாழ்க்கை பாதையிலும்
மிதமான
வேகத்தில் செல்வது
நல்லது என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும் ..!!
வாழ்க்கையில்
விபத்தை தவிப்பதற்கு
வேகம் என்பது
விவேகத்துடன்
இருக்க வேண்டும் ..!!
--கோவை சுபா