வார்த்தையின் வளம்

பலமாய் பலவகையான பலம் இருப்பினும்
பலன்தராத பல செயல்களை பலத்துடன் செய்து
பலவித தொந்தரவால் பலமிழந்து - தினமும்
பலரின் பல்வேறு ஏளனத்திற்கு ஆட்படும்
பலவானின் பலத்தால் யாதும் பலமில்லை

கலமேறி களத்தில் களங்காணும் கலைஞன்
கலகத்தின் காரணமாய் நிலைத் தெரியாமல்
களத்திற்கு சென்று வலம் வரும்போது அறிவான்
களத்தளம் மிகவும் நலங்கெடுக்கும் என்பதை களத்திலிருந்து புலம் அறிந்து விலகுவான்

இலம்புகும் இளந்தம்பதிகள் இளகியே இருந்தால்
இலஞ்செழிக்கும் இலகுவாய் பழகுவார் இலத்தார்
இலைமறை காயென துன்பங்கள் நீங்கும்
இளமை நீளும் சூழலால் இலமும் மாறுமே
இளைக்கா உடலும் இயல்பில் வாய்க்குமே

வளங்கள் வேண்டின் வளமுடன் உழைத்திடு
வளமிலா இடத்தில் இருப்பினும் வளரவேண்டியே
வளர்த்துக் கொள்ள வேண்டும் வளக்கலையை
வளங்கெடுக்கும் காரியங்கள் வலியவே வரும்
வளைந்துக் கொடுத்து வம்பை விலக்குதல் வளம்.

புலனறிதல் அறிவுக்கு பலமாம் மனங்கொள்
புலன்மயக்கம் கொள்வோரை தாழ்த்திவிடுமே
புலனடங்கள் வெல்லும் கலைகளில் முதலாம்
புலப்படும் எதையும் ஆய்ந்தரிபவன் புலவனே
புலைச்செயல் புதைகுழி போன்றது நாடாதே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Sep-21, 6:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : varthaiin valam
பார்வை : 51

மேலே