சூரிய முற்றம்

காரிருள் சூழ்ந்த கவினுறு வானின் கரிதுடைத்துக்
காரிகைப் போலக் கலைநயக் கீற்றுக் கரமெடுத்து
தூரிகை யின்றித் துயிலெழுங் கோலம் துரிதமிடும்
சூரிய முற்றம் சுடரொளி வீசி சொலித்திடுமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Oct-21, 1:50 am)
Tanglish : sooriya mutram
பார்வை : 89

மேலே