தாய்
தாய்,
என்ற சொல்லிற்கு
கவிதை எழுதுவதற்கு
அது என்ன
வெறும் ஈர் எழுத்து
சொல்லா?
ஆரம்பத்தையும் முடிவையும்
தேடுவதற்குள் ஆயிரம்
இரவுகள் கழிந்து விடும்
தாயே
உனக்கு நான்
கவிதை எழுதினால்
வியாசரையும் மிஞ்சி விடுவேன்
என் கவிதையால் மகாபாரதமும்
தோற்றுவிடும்
நீ அத்தனை அற்புதமானவள்
தாயே!

