காதல் கனி ரசம்

காதலித்தவனையே மணக்கும் பாக்கியம்
எத்தனை பேருக்குக் கிட்டும்?
பூர்வ ஜென்ம புண்ணியம்
எனக்கிருக்க வேண்டும்!
முதல் மகப்பேறிலேயே பிறந்தனரே
இரண்டு தங்கச் செல்லங்கள்!

ஆனந்தம் பேரானந்தாம் நெஞ்மெல்லாம் நிறைந்திட
வான் மதியை நான் பார்க்க
குளிர் பூந்தென்றல் என்னை
விண்ணில் சிறகடிக்க வைத்தது.

இரட்டைச் செல்லங்கள் இரண்டும்
பெண் குழந்தைகள்
மணமாகும் முன்னே நான் கண்ட கனவு
இன்று என் கைகளிலே மின்னும் பேரழகு!

தன்மானம் இழந்த தமிழச்சி நானல்ல என்பதால்
என் தமிழினத்தினர் பெரும்பாலோர்
பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கப்படி

இந்திப் பெயர்கள் இரண்டை என் துணைவரின் விருப்பப்படியும்
என் மனம் குளிரும்படியும்
தேர்ந்தெடுத்த பெயர்கள் 'அரனா', 'பரனா'!

உலகத் தமிழர்கள் எவருமே தம்
பிள்ளைகளுக்குச் சூட்டாத பெயர்கள்!
அரனா, பரனா எவர் காதில் விழுந்தாலும்
'சுவீட் நேம்' என்று பாராட்டி மகிழ்ந்தனரே.
பிறவிப் பயன் அடைந்தவளாய்
என் காதல் கனிரசத்தின் உருவமாய்
ஒளிரும் என் செல்லங்களை நீங்களும் வாழ்த்துங்களே!
@@@@@@@@@@@@@@@@@@@@@
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Arana = Jewel (Unisex name. Indian origin)
Parana = wife of Himalaya
அரண் - அரனா என்பதும் சரியே.

எழுதியவர் : மலர் (27-Jul-20, 2:57 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : kaadhal kani rasam
பார்வை : 85

மேலே