இறைவன்
நம் இதயத்தின் பக்கம் ஓரிடத்தில்
நமது ஆத்மா ஓரணுவாய் இருக்க
அதனுள் 'அந்தர்யாமியாய்' உறையும் இறைவன்
இதயக் கோவிலில் உறையும் இறைவன்.....
நான் உடலில்லை ஆன்மா என்றுணர்ந்து கொண்டால்
ஆன்மாவில் உறையும் இறைவனும் காட்சிதரலாம்
மாபெரும் கோயில் உள்ளே கர்பகிரஹத்தில்
சிற்பிவடித்த கற்சிலைக்கு அர்ச்சாவதாரமாய்
எழுந்தருளுகின்றான் மாதவன் மாயவன் மதுசூதனன்
நித்திய அபிஷேகத்தால், மலர் அலங்காரத்தால் கற்சிலையில்
நித்தியனாய் வடிவுபெற்று கற்சிலைக்குள் 'சாநித்யத்தில்
மாயவன் கண்ணன் இருக்கின்றான்'''''.........'அவன்' வெறும்
கற்சிலை என்று நினைப்போர்க்கு கற்சிலையே
பக்தியுடன் கண் திறந்து அவனையே பார்த்து
மனதில் இறுத்தி காண்போருக்கு காட்சிதரும் ஈசன் அவன்
இறைவன் எல்லாம் வல்ல மாபெரும் சக்தி
ஒளியாய் ஒலியாய் உருவாய் இருக்கின்றான்
அவனைக் கண்டுகொள்ள ஒரே வழி
பக்தியால் துதித்து அவனை சரணடைதல்
மனதிற்ளுள் ஒளிர்பவனைக் காண இந்த
மனிதன் காணாத தவறுவதேன்