அரசு அதிகாரியும் - அதிகாரமும் - கலித்துறை

பச்சா பாதகம் என்ற எண்ணமே இல்லாது
நச்சை உணவில் கலந்தே தினமும் அளித்திடும்
உச்ச பலமுள்ள பணத்தினை பெற்ற மனிதரால்
அச்சம் அடைந்த அரசினால் நன்மை கிடைக்குமோ --- (1)

மனத்தின் குணத்தை அறிந்து பதவியைத் தருதலே
சினத்தை தடுக்க சிறந்த வழியாம் மனிதருக்கு
தனத்தை கையூட்டாய் பெறவே பதவிப் பெற்ற
வனத்து முள்மனதைப் பெற்ற மனிதரை நீக்குக --- (2)

பணமே குறியாய் கொண்ட எவருக்கும் கிடைக்காது
பிணக்கு இல்லா சுற்றமும் நட்பும் ஊழியரும்
மணக்கும் பேச்சை அவர்கள் என்றும் பேசிடினும்
அணங்காய் ஆவாரோ பாதிப்பை பெற்ற மனிதருக்கு. --- (3)

ஆயினும் அமைதியை மனதுள் நிறுத்திடு பொறுமையாய்
பேயினும் கொடுமைக் கொண்ட மனிதர்கள் பதவியில்
மாயங்கள் நிறைந்த மனிதத் தன்மையே அற்றதாய்
காயங்கள் ஆக்கும் கொடுமை செயல்களே அவர்களால் --- (4)

பிறந்து விட்டோம் படித்ததால் அரசின் பதவியில்
இறக்கவே நினைக்கும் வகையில் அதிகாரிகள் செயல்கள்
மறக்கவே முடியாத முறையில் பணிகளும் ஒதுக்கீடும்
அறமிலா அரக்கராய் கோலோச்சி செல்வதால் புண்ணியமோ, --- (5).
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Oct-21, 7:34 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே