தமிழக அரசியல்

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
பாய்ந்தது ஒரு காலத்தில் ,,,,

இன்று

தமிழகத்தின்
ச(த)ரித்திர சாதனை
காவல் துணையுடன்
மதுபான நிலையம் ,,,,!

***********************************
புதியதோர் உலகை படைக்க
தமிழகத்தின் வினோத முயற்சி
'தெர்மாகோல் ஆராய்ச்சி ',,,,!

*************************************
தமிழர்களின்
தலையெழுத்து
'இலவசங்கள் ',,,,!

***********************************
அரசியல்வாதியின்
பகுதிநேர ஓய்வறை
சிறைச்சாலை ,,,!

************************************
ஊழல்களின்
வசிப்பிடம்
'தமிழகம் ',,,,!

******************************
அரசியல்வாதியின்
மனக்கணக்கு
'தமிழகம் விற்பனைக்கு ',,,!

எழுதியவர் : தங்கதுரை (11-May-17, 1:58 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : thamizhaga arasiyal
பார்வை : 71

மேலே