ஆண்டவனின் புலம்பல்

ஆண்டவனின் புலம்பல்
கவிதை by: பூ.சுப்ரமணியன்

அன்று
கோயில் கருவறையில்
குடியிருந்த என்னை
பக்தர்கள் வணங்கி
பரவசமுடன் நின்றார்கள் !

இன்று
என் வடிவத்தை
கதவு ஜன்னல்
கம்பிகளில் வளைத்து
அலங்காரப் பொருளாக்கி
அழகு பார்க்கிறார்களே ?!

அன்று
என் மீது
உண்மை பக்தியிருந்தால்
மன்னவனும் மக்களும்
எளிதாகத் தரிசிக்கலாம்!

இன்று
ஊழல் பணத்தை
உண்டியலில் போட்டவன்
கட்டுப்பணம் கையிருந்தால்
கருவறைக் கடவுளிடமே
விரைவாகக் கைகுலுக்கலாம் !

கோயில் கருவறையில்
குடியிருந்த என்னை
காட்சிப் பொருளாக்கி
காசு குவிக்கிறார்களே !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (11-May-17, 2:48 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 67

மேலே