அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்

அன்று

அவன்
மலர்களின் வாசனையில்
மயங்காமல்
மதுவின் போதையில்
மயங்கித் திரிந்தான் !

கவலையை மறக்க
மதுவை நாடினான்
மது இல்லாதபோது
மாதுவை நாடினான் !

மதுவும் மாதுவும்
இருந்தால்
சொர்க்கம்
என்று நினைத்தான் !


இன்று
அவன்
மயக்கம் தெளிந்தபின்
மனைவி மக்கள்
வாடிய முகம் கண்டு
சிந்தித்தான்
மதுக்கடைகளை
கண்டாலே
கண்களை மூடினான் !

பூத்துக் குலுங்கும்
மலர் சோலையின்
மத்தியில்
மன அமைதியை
உணர்ந்தான் !

தாயாக மதித்தான்
தாரத்தை தவிர .
பெண் என்றாலே
பின் சென்றவன்
முன் சென்று
வணங்கி நின்றான் !

மதுவில் மயங்கி
மாதுவில் கலந்து
இப்போதெல்லாம்
தன்னை இழக்காமல்
அமைதிப் பூங்காவில்
ஆனந்தம் காண்கிறான் !

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (11-May-17, 3:45 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : anrum intrum
பார்வை : 120

மேலே