வலிகள்

வலிகள்

தெருவுக்குள் நுழைந்தேன்
கதவுகள், ஜன்னல்கள் கை கொட்டி சிரித்தன
இரும்பு கேட்டோ இதயமில்லாதவன் நீ என கரித்துக் கொட்டியது
படிக்கட்டுகள் எங்களை பகடைக்காயாக்கியது ஏனோ என்றது
வீட்டிற்குள்ளிருந்து வீதி வரை ஒலித்தது கயவன் நீ என்ற கடுஞ்சொல்

என் காதுகள் செவிடாயின
திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பி விட்டேன் அங்கிருந்து
அவைகளுக்கு தெரியாது விற்கும் போது நானடைந்த
வலிகள், வேதனைகள், அவமானங்கள், துரோகங்கள் என்னவென்று

அதனால் என் வீட்டை [விற்ற] திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பினேன்
இல்லையில்லை
என் கனவு மாளிகையை திரும்பிக் கூட பார்க்காமல் திரும்பினேன்
அந்த தெருவிலிருந்து.

கிருஷ்.ராமதாஸ், பெரம்பலூர்

எழுதியவர் : கிருஷ்.ராமதாஸ், பெரம்பலூர (11-May-17, 9:28 pm)
சேர்த்தது : கிருஷ் ராமதாஸ்
Tanglish : kavithai
பார்வை : 112

மேலே