மனம் மயக்கும் மாலை நேரம்
காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியா பிறை நிலவே.......
நுனி விரல்த் தீண்டலின்
மறு கணத்தில் விலகிக் கொள்ளும்
காதலனின் காதலி போல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச் செல்கிறாய்?
கதிரவனின் கதிரொலியே...........
காணாத காதலனின்
கண் பார்த்த மறு நிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறு துளி விழிநீர் போல்
யாரைக் கண்ட மகிழ்ச்சியில்
மின்னி மிளிர்கிறாய்?
வைர ஒளி விண்மீனே..............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
