சந்திரன்

சந்திரனே!
அழகு சுந்தரனே!
மானிடர் மனம் திருடி சென்றாயே!
மந்திரம் என்னதான் செய்தாயோ?
மங்கை மனதில் மகிழ்ச்சி தவழ
கங்கை போல கவியெல்லாம் நீயே..!
உன்னை ரசிக்கும் வேளையில்தான்
ரசனையும் வசிக்கிறதென்னில்..!!
நீ வசிக்கும் மாலையில்தான்
வசந்தமும் மலர்கிறதென்னுள்..!