இயற்கை அன்னை
உப்பும் மீனும் அள்ளி அள்ளி தரும்
கடலுக்கு நாம் தருவதென்ன
ஒன்றும் இல்லையே
பருவம் தவறாது மலை பொழியும்
மாமேகங்களுக்கு நாம் தருவது
ஏதும் இல்லையே
நாகரீகத்திற்கு ஜீவாதாரமாம் வற்றா
நதிகளுக்கு நாம் தருவது
ஓயாமல் அவற்றை மாசுபடுத்துவது ?
தூய்மையை வந்த விண்ணிற்கு நாம்
தந்தது மாசு .................
சுவாசிக்க நல்ல காற்றும் ஒரு நாள்
இல்லாமல் போய்விடுமோ ..........
என்று விஞானிகள் சொல்லியும்
ஏற்றுக்கொள்ள அலட்சியம்
இப்படி எல்லாம் நமக்கு அள்ளி
தரும் இயற்கைக்கு நாம்
ஒன்றும் தரவில்லை , தரவும் இயலாது
ஆயின் இயற்கையை நாம் தூய்மையாய்
வைத்துக்கொள்ள தவறிக்கொண்டே இருக்கிறோம்
இது நமக்கு நாமே குழி பறித்துக்கொள்ளுதல்
அல்லவா
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்
அவள் நமக்கு என்றும் அள்ளி அள்ளி தரும்
அன்னையாய் தெய்வமாய் நம்மை
வாழ்வாங்கு வாழ்விப்பாள்