விதை தேடு

விதை தேடு மனிதா
உன் இனம் உன்னை தேடும்
ஒருநாள்..........
சமூகத்தின்
தேவைகளும் தேடல்களும்
முரன்பாட்டின் முன்உதாரணங்கள்.........
இயற்கையை பகைத்து இறையாண்மை
தேடும் சமூகத்தின் தூண்கள் நாம்........
விதைக்கு விளைநிலம் தேடியகாலம் கடந்து
விசாலமான நிலம் விலைக்குதேடும்
சாமானியர்கள் நாம்..........
அணைகட்டில் தண்ணீர் அடைத்த காலம்போய்
பாட்டிலில் அடைத்து பயன்படுத்தும்
பாரம்பரியத்தை கடத்தும்
தொடரிகள் நாம்..........................
மண்ணில் விதை ஊன்றும் நிலைமாறி
மாடியில் விவசாயம் கற்றுக்கொடுக்கும்
கண்டுபிடிப்புகளின் சொந்தங்கள் நாம்.................
மாற்றத்தின் பெயரில்
தேவைகளை புதைத்து அதன்மேல்
வளர்க்கும் முட்செடிதான் நம் தேடல்கள்...........
காலங்கள் கடந்தாலும் வயிற்றின்
தேவை உணவுதான் மனிதா.........
அதனால்,
விதை தேடு மனிதா
உன் இனம் உன்னை தேடும்
ஒருநாள்.........
இளைப்பாற வேண்டி துயில்கொள்ளாதே
விவசாயத்தை தூக்கில்போட காத்திருக்கிறது
ஒரு சமூகம்..............
பூமியும் ஒருநாள் பொளுதை
இன்றும் சரியாக கடக்கிறது மனிதா.............
நாம் தான் ஓடிகொண்டிருக்கிறோம்
நிதானமாய் நின்றுபார்
அனைவரும் அபத்தங்களின்
அடிமைகளாய் தெரிவார்கள்..................
இன்று விவசாயத்தை தேடுகிறோம்
ஒரு நாள் விவசாயியை தேடுவோம்........
அதனால்,
விதை தேடு மனிதா
உன் இனம் உன்னை தேடும்
ஒருநாள்.........

எழுதியவர் : மதி (9-May-17, 7:44 pm)
சேர்த்தது : MATHIARASAN
Tanglish : vaithai thedu
பார்வை : 114

மேலே