மீண்டும் ஒரு காதல் கதை

எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்,,,,,,
கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது,,,,
நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது,,,,,
சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது,,,,
காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட
செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்
காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்,,,,,
இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்
இன்புற்று
கிடந்தது
காதல் மனம்,,,,
சிறு இடைவெளியில்
காலம் விளையாட
எழுதப்பட்ட
ஒன்றாய்
என் காதல்
மீண்டும்
தந்த பரிசு
கண்ணீர்,,,,,!