காதலெனும் கிணற்று தவளை 555

உயிரானவளே...
நீதான் என் உலகம் என்று
உன்னையே
சுற்றி வந்த என்னை...
உன் ஆடையில்
ஒட்டிய தூசிபோல்...
என்னை
தூக்கி எறிந்தாய்...
காதல் மட்டும்தான்
உலகம் என்று...
கிணற்று தவளைப்போல
இருந்த நான்...
முதன் முதலில் பறந்து விரிந்த
ஆகாயத்தை பார்த்தேன் தலை நிமிர்ந்து...
அதில் அழகிய
வாழ்க்கையையும் ரசித்தேன்...
காதல் என்னும்
சிறுபுள்ளிக்காக...
அழகிய வாழ்க்கையை
இழக்க நினைத்தேன்...
கண்களின் அருகில் காதல்
இருந்ததால்...
அழகிய உலகம்
மறைக்க பட்டது...
தொலைவில் காதலை
வைத்து பார்த்தேன்...
உலகம்
அழகாக தெரிகிறது...
வலிகளை கொடுத்து என்
வாழ்விற்கு
முற்றுப்புள்ளி வைத்தாய் நீ...
நீ வைத்த
புள்ளியின் அருகில்...
நான் மீண்டும் ஒரு
புள்ளிவைத்து தொடர்கிறேன்...
என்
அழகிய
வாழ்க்கையை...
வாழ்க்கை என்னும்
புதுநூல்
கொடுத்த என்னவளே...
உனக்கு நன்றிகள் பல...
வாழப்போகிறேன்
புது மனிதனாக நான்.....