உன்னை அள்ளி அனைத்து முத்தமிட வேண்டும் 555

அன்பு மகனே...




உன் பால்பற்களால் நீ தினம்
கடித்து
வைக்கும் தக்காளிபழம்...

நம் வீட்டு
சமையல் அறையில்...


ரசமாகவும் சாம்பாராகவும்
தினம் கொதிக்கிறது...

உன் அன்னையும்
தாத்தா பாட்டியும்...

உன் எச்சில் ருசியை
ருசிக்கிறார்கள்...

தினம் சுவையான
சமையல் என்று...

உன் பால்பற்களால் கடிபட
முடியாத தந்தை நான்...

இனிப்பு டப்பாவில் கூட
எனக்கு பிடித்த இனிப்புகளையே...

நீயும் தேடி தேடி
ருசிக்கிறாயாம்
என் செல்லமே...

இரண்டு பற்கள் நான்காகி
எட்டாகி நிற்கிறது...

உன் பால்பற்களால் உன் தந்தை
கன்னத்தை எப்போது பதம்பார்ப்பாய்...

எனக்கு
பப்பாளி
பிடிப்பதில்லை...

நேற்று நீயும் பப்பாளி
ருசிக்கவில்லை...

தன்னை மறந்து நீ
தூங்கும் நேரத்திலும்...

உன் தந்தைபோலவே
தூங்குகிறாய் என் தங்கமே...


உன்னை அள்ளி
அனைத்து முத்தமிட...

இந்த அயல் நாடு என்று
எனக்கு விடை கொடுக்குமோ.....




எழுதியவர் : முதல் பூ பெ.மணி (30-Jul-20, 4:25 pm)
பார்வை : 9910

மேலே