ஆனந்த பூங்காற்று

வளர்பிறை மட்டும் தான்
எந்தன் நிலவுக்கு,,,,
நாளுக்கு நாள்
வளர்கிறது
காதல் நிலா,,,,,!
கவிதை வரிகள்
தோன்றவில்லை,,,, மாறாக
காதல் வரிகள்
உதிக்கிறது
இதய தோட்டத்தில்,,,
லப் டப் ஓசை
குறைந்து
திருமண ஓசை
கேட்கிறது
இதய கூட்டில்,,,,
சூரியன் உதிக்க
வெள்ளி முளைக்க
மாலை மயங்க
நிலவும் ஒளிர
காலம் கடக்க
நாளும் முடிய
கண்கள் பணிக்கிறது,,
நீ வரும்
வழியெல்லாம்
அடைபடுவதை பார்த்து,,,!