பொன்னவள் - தனலட்சுமி
தங்கத்தின் மேன்மைதனை வர்ணிக்க இயலுமா ?
இயலுமெனில் கவிச்சோலை அமைக்கக் கூடும் !
இதோ எமது சிறிய கவித்தோட்டம் -
பட்டாடை படரவிட்டு பகுத்தறிவு பழக்கம்கொண்டு,
சித்திர சிலைபோல கருநிற அழகுபற்றி,
மங்கையவள் கொண்ட படியதில் பூச்சூடி,
தேன் குழல் குரல் பற்றி,
கற்ற தமிழை நாளும் போற்றி ,
கொண்ட கணவனை நாளும் சுற்றி ,
நடையிசைக்கும் மணிக் கொலுசு உடுத்தி,
கலாச்சாரம் போற்றும் இலட்சிய இலட்சுமியாக,
நாகரிகம் காக்கும் வீர இலட்சுமியாக,
அனைத்தும் ஒருசேர பெற்றவள் தான்-
தனம் தாங்கிய தாரகை தனலட்சுமி.
-மு.வி (மு.விக்னேஷ்)