முள்ளுக்காக மலர்ந்த பூ

உன் கண்களில் எந்தன் முகம் ஓடும்,

உன் இதயத்தில் ஒரு அறை திறந்திருக்கும்,

உன் இரு விழி பார்வை என் மேலே பட்டு,

என் இருண்ட இதயத்தில் ஒளி மிளிரும்..


மல்லிகைப்பூவே உன் மனசுக்குள் நானே குடிபெயர்ந்தேன்,

உன் கருவிழிக்குள் என் அறையின் சாவி இருப்பதை தெரிந்து கொண்டேன்..


நெசமா உன்னில் நான் விழுந்தேன் என் உசுரில் உன்னையும் சேர்த்து கொண்டேன் என் இருதய துடிப்பின் பாதி நீ என புரிந்து கொண்டேன்..

கனவில் வந்து பேசி சென்றாய் நேரில் ஏனோ மெளனம் கொண்டாய் உன் மெளனத்தின் பாசை புரிந்து மெல்ல சிரித்துக் கொண்டேன்,

உன் இதழின் ஓரம் சிரிப்பைக் கண்டு என் இமைகள் இரண்டும் விரித்துக் கொண்டு உன் சிரிப்பை ரசித்தேன்.

இமைகள் மூடி திறக்க அடம் பிடிக்கும்..

அழகியே என்னை அலையவச்ச உன் சிரிப்பிலே உசுர உருகவச்ச நான் பார்க்கும் நிலவில் ஒம் மொகத்த ஒளிச்சு வச்ச..

கண்கள் தேடுது என் நிலவே நான் குளிரும் சூரியன்தான் நீ தயங்க தேவையில்ல என் விழிகள் மூடும் முன்னே நீ என்னில் சேர்ந்து விடு...

எழுதியவர் : (22-Nov-16, 9:41 am)
பார்வை : 258

மேலே