பெண்மையின் குரல்
ஏன் இந்த அவலம்? ஏன் இந்த அவலம்?
புரியாத புதிரை புரிந்துக் கொள்ள முற்படுவது தவறல்ல
பிடுங்கி எறிய நினைப்பது தான் தவறு!
பூப்போன்று இருப்பதால் தேனெடுக்கலாம் என்று நினைத்தாயோ?
விட்டு கொடுத்துப் போவதால் ஏறி மிதிக்க துணிந்தாயோ?
உன் எண்ணங்களை எண்ணெய் விட்டு கொளுத்து.............
பாரதி கண்ட புதுமைப் பெண்களுக்குள் பூத்த விந்தையான பெண்கள் நாங்கள்!
சூழ்ச்சியும் தெரியும்!
சூழ்நிலையும் புரியும்!
இன்று நீ சூழ்ச்சியால் வெல்லலாம்
நாங்கள் சூழ்நிலையால் தாழலாம்
ஆனால் சூழ்நிலையும் சுழன்று கொன்று இருக்கும் என்பதை மறவாதே!
உன்னை அடக்கி ஆள என்றும் விரும்பியதில்லை....
உன்னிடம் அடங்கி போய்விடுமளவிற்கு நாங்கள் தாழ்ந்திடவுமில்லை!
நாணத்தால் நெளிந்ந முகம்- அன்று நாடான்ற வீரத்தை மறந்தாயோ?
பொறுமையின் இலக்கணம் - அன்று பொறுக்காமல் பாண்டிய நாட்டை பார்வையால் தீவைத்த கற்பின் வலிமையை அறியாயோ?
முதல் பிரசவத்தில் மரண கதவை தட்டி வந்த பின்பும்
அடுத்த பிரசவத்திற்கு தயாராகும் தளராத மனவலிமை கொண்டவர்கள் நாங்கள் !
கண்ணகியையும் கல்யாணியையும் ஈன்ற தமிழ்த் தாயின் திருவயிற்றில் கருக்கொண்ட தமிழச்சிகள் நாங்கள்!
தீக்குச்சியாய் பறக்கவும் தயார்!
தீப்பிழம்பாய் பொங்கவும் தயார்!!