கன்னித் தீவு

காதலி கை விட்டாள் என்று
நொந்த மனத்தோடு
இனி இந்த வாழ்க்கையில்
காதலுக்கோ, காதலிக்கோ
இடம் ஏதும் இல்லை
என்று சபதமெடுத்தேன்

வீடு சேர்ந்தேன்
படுக்கையில் நெளிந்தேன்
தூக்கமும் வரவில்லை

நதியோரம் நின்றேன்
அமைதி கிடைத்தது
தோணியில் ஏறி
நிலவொளியில் உலாவந்தேன்


ஐயோ தோணி கவிழ்ந்தது
நானும் கவிழ்ந்தேன்
சரி விட்டது போ இந்த
வாழ்க்கை என்று எண்ணிட
என்னை அறியாமல்
மிதந்து வந்த
மரப்பலகையை கட்டி பிடிக்க
இரவெல்லாம் பயணித்தேன்

அலுப்பில் அயர்ந்து தூங்கிவிட்டேன்

விழித்து பார்க்கையில் .............
தீவு வொன்றில் நான் ..............
என்னை சுத்தி வெறும் பெண்கள்
அத்தனையும் அழகிய பெண்கள்
அது கன்னி தீவு என்றனர் !
அவர்கள் கண்டெடுத்த முதல்
ஆடவனாம் நான் !

காதலில் தோல்வியுற்றேன் என்று
நான் நினைத்தேன்

இப்போது தெரியவில்லை
என்ன சொல்வதென்று
நானோ கன்னித் தீவில்
வாழ்க்கையே வேண்டாம் என்று
ஒதுக்கியபோது !

பழம் நழுவி பாலில் விழுந்ததோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Nov-16, 8:09 am)
Tanglish : kannith thivu
பார்வை : 128

மேலே