இமைக்கும் நெஞ்சத்திற்கும் ஓர் போட்டி

என்முன் இருக்கும் அவளுக்கு தெரியாமலயே
அவளின் இமை அசைவுகளின் எண்ணிக்கைக்கும்
என் நெஞ்சத்துடிப்பின் எண்ணிக்கைக்கும்
ஒரு போட்டி வைத்திருந்தேன்.
எங்கெங்கோ எத்தனையோமுறைப் பார்த்து
என்னைத் தோல்வியின் அருகில் தள்ளிவிட்டவள்
எதிர்பாரா விதமாக என் இமையை
நேருக்கு நேர் சந்தித்ததுதான் தாமதம்.
அவள் இமைகள் துடிப்பதை மறந்துவிட்டு என்
நெஞ்சத்தைத் விரைவாகத் துடிக்க வைத்து
வெற்றிபெற வைத்தன என்னை வென்றவளிடம்.