கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருஷ்ண சதானந்த விவேகானந்தன்
இடம்:  திருவண்ணாமலை/ ஆஸ்திரேலிய
பிறந்த தேதி :  15-Jun-1944
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2015
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  147

என்னைப் பற்றி...

த.நா.அரசு அலுவலர் (ஓய்வு ),திருவண்ணாமலை.
எழுத்து. புதிய அனுபவம். எழுத்துத் தள நண்பர்கள் வழி காட்டுதலை வரவேற்கிறேன்.

என் படைப்புகள்
கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் செய்திகள்

*அண்ணல் இராமதாஸ் அப்பாய். நினைவேந்தல்.*

அடக்கத்தின் நல்லுருவம்
அமைதி நெஞ்சம்,

அறவாழி! அறிவாளி!
அண்ணல் மரு.இராமதாஸ் அப்பாய். !

பெற்றோர் தாயார் அப்பாய்
பேர் விளங்க வாழ்ந்த தனையன்!

வடக்கிருக்கும் இமயமென
உயர்ந்த உள்ளம்

வற்றாத கங்கையென
அன்பின் வெள்ளம்!

இன்புற நட்புறவு பாராட்டும்
அன்பர்

நாளும் விரும்பியே
அணிந்த ஆடை

அகத்தின்
அழகாய் தூய வெள்ளை!

மலர்ந்தும் மலராத
பாதி மலர் போலும்

மாமனிதர் புன்னகை
அழகு முல்லை

ஏர் பிடித்து வாழ்வோர்க்கே
தேர்ந்து கனிந்த மலைவாழைத்

தார் போலும் கல்வி - தரும்
பார் போற்றும் வாழ்க்கை

தூர் எடுத்த ஆழ்கிணறு
நீர் ஊற்று மிகுதல்போலே

கற்றனைத் தூறும் அறிவு பெருகு

மேலும்

*மகிழ்ச்சி எனக்குப் புதிரல்ல!*

அருமைப் பெரியோரே வாரும்
-என்
அன்பு அம்மாவிடம் கூறும்
என்பால் அவளின் கருணை
என்றும் ஜீவித பொருநை
என் ஈசன் அளித்த வரமே.

தேற்றம் தருதல் இல்லா
தோற்றமே மிகும் பொருளைத்
தேவை என்றே நினைத்து
தேடிக் கிடைக்காமல் துவண்டு
வாழ்க்கை புதிர் என்பார்
வாலிபம் எட்டிய பருவத்தினர்.

இதயம் என்பது கையளவு
இன்பம் என்பது கொள்ளளவு
எள்ளளவு மிகினும் இகழ்ச்சி
உள்ளத்தின் உயர்வே மகிழ்ச்சி


எப்போதும் இயற்கை உணவு
ஏப்பம் வருமுன் நிறுத்துவேன்
எதையும் அளவாய் ஏற்பேன்
பதைப்பு இல்லை எனக்கும்
ஏகாந்தம் என் உலகம்
எளியவன் நான் என்பேன்

திரண்ட அன்பின் அணைப்பு

மேலும்

ஆண்டுதோறும் இனிதாம்
ஆவணி அவிட்டம் திருநாள்
அசைபோடும் என் மனது..
அந்த நாள் நினைவுகளில்..

ஆற்காடு என்னும்
அணி திகழ் நகரில்
ஆன்மிகப் பெரியார்
"இராதாகிருஷ்ணன்"
அருமைப் பெயர் பூண்டு

அறவோர் அறிஞர்கள் வாழும்
அணிசேர் மாடவீதியில்
அருளாட்சி செய்யும் தெய்வம்
அருள்மிகு சுந்தரமூர்த்தி
ஆனைமுகன் உறையும் ஆலயம்.

ஆவணி அவிட்டம் நன்னாளில்
ஆர்த்து எழும் மகிழ்ச்சியுடனே
அரவணைக்கும் நல் பாங்குடனே
அன்பர்கள் இணை நண்பர்கள்
அன்பால் கூடுவர் அனைவருமே!

பாண்ட் சரட்டு போட்டவர்.
பட்டு வேட்டி பளபளக்கப்
பட்டை மூன்று பட்டை
பால் வெண்ணீறு அணிந்து
புதுப் பூணூல் போட்டு

புது மாப்பிள்ளைகள் - அன்று

மேலும்

*பார் புகழ வாழ்வீர் அப்பா*.

முன்னோருக்கு முன்னோரெல்லாம்.
இன்னாரென்று கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதிச் சொல்லுதற்கே
ஏன் சிரமம் கொள்வீர் என்றே

எக்குலமும் வாழ்த்து சொல்லும்
முக்குலத்தோர் பெருமகனார் நல்
முத்துராமலிங்கனார் புகழ் போற்றி
முத்துக்கு முத்தாக முன் எடுத்து

அவர்போலே உருவெடுத்து - எம்
அவாவினை தீர்த்தீர் அப்பா

இவர் போல யார் என்றே
இனிதான பேர் எடுத்தே
தேர்போலே பவனி வந்து
பார் புகழ வாழ்வீர் அப்பா!.

மேலும்

காந்திய வழியைக் கடைப்பிடித்தார் கலப்பு திருமணத்தை ஆதரித்தார்

காரிருள் சூழ்ந்திருந்த தாயகத்தில் வரிந்துகட்டிய *கச்சை* வேட்டியுடனே

சுதந்திரப் போரில் இணைந்தார் - மக்கள்
சுகம் பெறவே நாளும் உழைத்தார்

மூவுலகிலும் காணக் கிடைக்காத மூதறிஞர் என்றே புகழப்பெற்றார்

பகுத்தறிவு பகலவன் ஆசான் - தந்தை
பெரியார் அவர்களுக்கு நேசன்

உன்னத உழைப்பை நல்கியே
இத்தியத் திருநாட்டின் மேதகு
உயர் பதவியும் பெற்றார்

மனிதம் நிறைந்த மாமனிதர் -
இராஜாஜி அவர் செயல் திறன்

மகத்துவம் அறிந்தே எந்நாளும்
நினைந்து வாழ்த்திப் போற்றுவோமே!

மேலும்

தங்கள் சுயவிவரம் கண்டேன். நாம் சம வயது இளைஞர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி. மருத்துவர் என்பது அறிந்து கூடுதல் மகிழ்ச்சி. 23-Jan-2022 12:17 pm
நன்றி அய்யா. தங்கள் சிறப்பான கருத்துக்களை, நிறை குறைகளை சுட்டிக்காட்டி, தொடர்ந்து பதிவிட்டு வளப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன். 23-Jan-2022 12:08 pm
தங்கள் பதிவுகள் சிறப்பாகவே இருக்கின்றன. அந்தக் காலப் படிப்பல்லவா! வாழ்த்துகள். 22-Jan-2022 7:13 pm
கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் - Vivek Anand 354 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2018 2:43 pm

இல்லற வாழ்வின்
இலக்கணம்!

இயல்பாய் அமைந்து
இனிக்கும் ஓவியம்

இதமாய் மலர்ந்து
படைக்கும் காவியம்

இணைந்து இயைந்து
இருப்பது வாழ்வே - எனில்

இல்லற வாழ்வின்
இலக்கணம் இதுவே!

மேலும்

வைத்தியநாதன் • 06-Apr-2018 4:23 pmமுன் யாழ்வேந்தன் • 06-Apr-2018 5:40 pm தங்கள் கருத்துரைக்கும் அன்புக்கும் நன்றி 10-Apr-2018 2:28 pm
யாழ்வேந்தன் • 06-Apr-2018 5:40 pm தங்கள் கருத்துரைக்கும் அன்புக்கும் நன்றி. 10-Apr-2018 2:27 pm
புரிதலுக்குள் வாழும் உறவுகள் அனைத்தும் கல்லறைவரை பிரியாதவை... அருமை 06-Apr-2018 5:40 pm
மிக மிக அருமை....படம் நன்று. 06-Apr-2018 4:23 pm

காவியங்கள் கண்ட காதல்!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷?÷÷?

திருவிழா வந்தது ஊரினிலே
திரளாய் வந்தனர்
ஊர் இளசுகளே
காதல் இளம் பருவத்திலே
கருத்து ஒருமித்த
இரு இளசுகளே
கட்டுண்டார் கண பொழுதினிலே!
காவியங்கள் கண்ட காதலிலே!

பூத்து வந்த காதலை
பரிசிக்க காத்திருந்தார்
அந்த நாளும் வந்ததே
அடுத்த திருவிழா நாளிலே!

காதலர் இருவரும் வலி தீர
கண்ணொளி மழுவி தழுவினாரே
சோலையில் சந்திக்க நாள் பார்த்து
ஓதி வைத்தார் ஓர பார்வையிலே !

மஞ்சள் வெயில் பார்த்து
மலர் சோலை சார்ந்து
அன்னக்கிளி
அன்ன நடை மறந்து
அஞ்சும் நடை நடந்தா

மேலும்

Mohamed Sarfan • அன்பு நண்பரே. தங்கள் கருத்து புத்துருக்கு நெய் அமுதம். தொடர்ந்து அளியுங்கள். புசிப்பேன். நன்றி. . . 19-Nov-2016 1:14 pm
காவியங்கள் உயிர் பெரும் காதல் மாண்பானது..ஆனால் இன்றைய காதல்கள் பல தொடக்கத்திலேயே வாழ்க்கையை முடித்து விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Nov-2016 8:34 am

அம்மா என்பது காண்டீன்.!
++++++++++++++++++++++++++
மம்மி எழுந்தது எட்டு மணி 
தும்மவும் நேரம் ஏது இனி 
கம்மி நேரம் ஆனாலும் அது 
இம்மி குறையா ஒப்பனைக்கே! 

பள்ளி செல்லும் மழலை 
பசியால் வாடிய சவலை - புனை
அழகில் சிறந்த மம்மி 
அலட்டலாய் தந்தார் காசு! 

ஆபீஸ் செல்லும் அவசரம் 
ஆப்ஸன்ட் அன்பு நேசக்கரம் 
இறைவன் அருளே ஆதாரம் 
இதுவே வாழ்க்கைச் சக்கரம்! 

பரபரக்கும் மதிய நேரம் 
பாம்பென ஊறும் வரிசை 
பதை பதைக்கும் வயிறு 
பாசம் இல்லா சோறு! 

பையப் பைய நகர்ந்து 
பைசா கொடுத்து வாங்கிய 
பள்ளி காண்டீன் உணவு 
பசிக்க உண்டு கரைந்தது! 

அறிவில் சிறந்த குழந்தை 
அழகாய் புரிந்து கொண்டது 
அன

மேலும்

Mohamed Sarfan கருத்துக்கு நன்றி. தாங்கள் தொடர்ந்து ஊக்கம் தருவதற்கு மிகவும் நன்றி.. 21-Oct-2016 5:12 am
இன்றைய யுகத்தின் அவசரம் எனும் நிலைமை தான் பல அசாதாரண விழைவை தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2016 10:33 am
கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2016 2:50 pm

என்னவள் தனலட்சுமி. 
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ 

புலர்ந்தும் புலராத மார்கழி 
இளங்காலைப் பொழுது 
மலர்ந்தும் மலராத என் 
மனம் கிளர்ந்த காதல் போலே 

திறந்தும் முற்றும் திறவாத 
எதிர் வீட்டு வாசல் கதவு 
திறக்கத் தயங்கும் அவள் 
திடமன கதவு போலே 

இருள் விலகாத நேரம் 
இருந்தும் என்ன?ஒளிரும் 
என்னவள் கன்னி முகம் 
வெண் முத்து அழகி சுடர் 
பொன் மகள் தனலட்சுமி 

முழுமதி எழு மதியாய் 
கெழு மஞ்சள் பூசி 
குங்கும சிவப்பில் பூத்து 
துலங்கும் தாமரை முகம் 

முகிலை விலக்கி 
முகம் காட்டும் 
முதிர் நிலவு போலே 
முந்துறும் அவள் முகம் 
முன் கதவுக்கு இப்பாலே 

பச்சை பட்டு உடுத்தி 
பாங்குடன

மேலும்

Sureshraja J • நண்பரே நன்றி! தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தை அளியுங்கள். 24-Nov-2016 1:37 am
அழகு 24-Nov-2016 12:27 am
Mohamed Sarfan: தங்கள் கருத்துக்கு நன்றி. 23-Nov-2016 10:12 am
பூங்குழலால் பூக்களால் பூவையாகி சங்கு மணி மாலையில் வெண்ணிலவாய் 23-Nov-2016 7:28 am

என்னப்பா  
நீ வடிக்கும் பா!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எடுப்பா உடை அணிந்து  
கடுப்பா முகம் கோண  
என்னப்பா நலமா என்றே  
கண்ணப்பா இன்று வந்தார்!  

நட்பா வந்தார் என்றே  
நண்பா வாப்பா என்றேன்  
அமரப்பா என்றேன் சுழிப்பா  
நகரப்பா என அமர்ந்தார்.  

பிடிப்பா விருப்பா பேசாமல்  
தடிப்பா குரல் எழுப்பி  
நெருப்பா வார்த்தை கொட்டி  
வெறுப்பா பார்வை காட்டி  

படிப்பவர் மனதைத் தட்டி  
பிடிப்பா எழுப்பா பா  
என்ன பா என்னப்பா  
நீ வடிக்கும் பா என்றார்!  

அப்பா சற்றே பொறுப்பா  
தப்பா இருப்பின் மன்னிப்பா  
தமிழ் பா மேல் காதலப்பா  
தவிப்பா புனைந்தேன் புதுப்பா  

உதைப்பா மனம் கரிப்ப

மேலும்

Mohamed Sarfan: உங்கள் அன்புக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதளில உதித்த எண்ணங்கள. நன்றி. ணங்கள் 23-Nov-2016 10:08 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Nov-2016 7:54 am
இராசேந்திரன் அளித்த எண்ணத்தை (public) கங்கைமணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Oct-2016 11:36 am

மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு


நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் , 
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)   

தமிழன்பன் _80 விருதுகள்:
சீதா ரவி (இதழியல்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்) 
Dr. கோபி ( யாழ் அரங்கம்) 
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)

என்னோடு சேர்ந்து  கவிதை, ஊடகம், ஓவியம் . இதழியல்,கல்வி என பல பிரிவுகளில் விருது வாங்க இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

இதைப் பகிர்ந்து வாழ்த்துகளையும் தந்த அகன் அய்யாவுக்கு நன்றி . குக்கிராமத்து மூலையில் இருந்தாலும்  என்னையும் அங்கீகரித்து இந்த எழுத்து தளத்தில் நான் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ்சார்ந்த படைப்புகளுக்கு   எனக்கும் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் ஒரு விருது. மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி  எழுத்து தளத்துக்கும்,   உங்களது மேலான கருத்துகளில்  என்னை உயரம்காண வைத்த தளத்தோழமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நன்றிகள். 


இந்தவிருதை உங்கள் அனைவருக்கும்  என் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். 

என்றும் உங்கள் ஆசிகளில்
நன்றியோடு நான்

மேலும்

நன்றி அய்யா. இன்னும் பலவற்றை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் வாழ்த்துக் கவிதை மூலம். எனக்குள் இன்னும் செழிப்பாக துளிர்விட்டிருக்கிறது அய்யா 15-Nov-2016 9:58 pm
உம் வாழ்த்துக்கு நன்றிகள் அன்புத் தம்பியே. இளையோர் பெரியோர் என எல்லோரின் மனங்களில் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனம் மகிழ்கிறது. தலைமுறை தாண்டிய பல படைப்புகளைப் படைக்க ஒவ்வொருவரின் வாழ்த்தும் எனக்கு உறுதுணையாக இருக்கும். 04-Nov-2016 8:23 pm
அன்பு நண்பர் இராசேந்திரன்! நலம். நலமே வாழ்க நீடூழி! எழுத்து தளத்தில் தாங்கள் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகளுக்கு ் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் விருது பெற்ற செய்தி கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். வெற்றி புரிக்குச் செல்ல வேதனை புரத்தைத் தாண்டு என்றார் அண்ணா! நீ எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தட்டுத் தடுமாறாத திடமான நெஞ்சுரம் கட்டிக் காக்கும் தன்னம்பிக்கை கொட்டி மகிழ்ந்த ஓயாத உழைப்பு வேதனையை வெட்டித் தள்ளி சோதனையை நெட்டித் தள்ளி சாதனையை எட்டிப் பிடித்தாய் விருதை தட்டிப் பறித்தாய். மண்ணில் விதை போடுவதற்கு முன்- உன்னில் அதைப் போட்டு உருவாக்கி கண்ணில் அமை கருவிழியாய் காக்க தன்னில் அது தழைக்கும் தல விருட்சம் ! குருவிகள் நெல் அறுவடைக்கு வரும் நாளுக்காகக் காத்திருந்தன குவித்து விட்டாய் சிறப்பான விருது குன்றொக்கும் களஞ்சியம் - நானும் குருவிகளோடு இணைந்து விட்டேன் கருத்துடனே பாராட்டி மகிழ்வவற்கே.!! நண்ணுவ எல்லாம் நலமுற்றே நாளும் ஈட்டும் நற்புகழால் மெத்த நலம் பெருகி குடும்ப வாழ்க்கை மேன்மேலும் வளம் பெருகி சிறப்படைய உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று உள்ளம் நிறைந்து மகிழ்ந்து வாழ்த்துகின்றேன் :! நல்வாழ்த்துக்கள்! 03-Nov-2016 6:27 pm
வாழ்த்துக்கள் அண்ணா 02-Nov-2016 9:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (13)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

என் படங்கள் (1)

Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே