அம்மா என்பது காண்டீன்
அம்மா என்பது காண்டீன்.!
++++++++++++++++++++++++++
மம்மி எழுந்தது எட்டு மணி
தும்மவும் நேரம் ஏது இனி
கம்மி நேரம் ஆனாலும் அது
இம்மி குறையா ஒப்பனைக்கே!
பள்ளி செல்லும் மழலை
பசியால் வாடிய சவலை - புனை
அழகில் சிறந்த மம்மி
அலட்டலாய் தந்தார் காசு!
ஆபீஸ் செல்லும் அவசரம்
ஆப்ஸன்ட் அன்பு நேசக்கரம்
இறைவன் அருளே ஆதாரம்
இதுவே வாழ்க்கைச் சக்கரம்!
பரபரக்கும் மதிய நேரம்
பாம்பென ஊறும் வரிசை
பதை பதைக்கும் வயிறு
பாசம் இல்லா சோறு!
பையப் பைய நகர்ந்து
பைசா கொடுத்து வாங்கிய
பள்ளி காண்டீன் உணவு
பசிக்க உண்டு கரைந்தது!
அறிவில் சிறந்த குழந்தை
அழகாய் புரிந்து கொண்டது
அன்பை அறியா மழலைக்கு
அம்மா என்பது காண்டீன்.!